பரிகாரம்

வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள பனம் பழத்தைச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம்

வேதபுரீஸ்வரர்
Written by Svttv

திருவண்ணாமலை அடுத்து செய்யாரில் உள்ள வேதபுரீஸவரர் திருக்கோயிலில் ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருஞானசம்பந்தரின் 11 பதிகங்கள் பாடிய பின்புதான் கோயிலுள்ள பனை மரத்திலிருந்து பனம்பழம் விழுகிறது. இந்த பனம் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் 8வது திருத்தலமக புகழ்பெற்று இறைவனின் அருளால் நிலைத்தும், பனை மரத்தினை தலவிருட்சமாக கொண்டுள்ளது இந்த திருத்தலம். இத்தலதத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தேவர் மற்றும் முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்ததால் ஒத்தூர் என்று பெயர் கொண்டது. அரிய அடைமொழி திரு சேர்த்து திருவோத்தூர் என அழைக்கப்படுகிறது.
பஞ்சவர்ண நிறத்தில் எழில்மிகு தோற்றத்தில் ராஜகோபுரம் கீழ் அடுக்கின்மேல் 6 நிலைகளை கொண்டுள்ளது. இக்கோபுரத்தின் நான்கு மூலையிலும் 4 பூதங்களும் அதன் பக்கத்தில் இரு ரிஷபங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் துஷ்ட, பூத, பிரேத,பிசாசுகள் பயந்து ஓடவும், இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை காத்து ரட்சிக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் நான்கு திசைகளிலும் கிழக்கே மூலவரின் வடிவமும், தெற்கே தட்சணாமூர்த்தி வடிவமும், வடக்கே பிரம்மா வடிவமும் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலினுள் நுழைந்தவுடன் வெளிப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள நந்தி பெருமான் நம்மை வரவேற்கிறார்.
இறைவன் ஸ்ரீவேதபுரீஸ்வரர் மாதவர்களுக்கும், வானவர்களுக்கும் ரிக்,யசூர்,சாம, அதர்வண வேதங்களை உபதேசம் செய்தபோது பகைவர்கள் நுழைவதை தடுக்கவே காவல் தெய்வமாக நந்தி பெருமானை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கோயிலுக்குள் தெற்கு புறத்தில் கல்யாணகோடி தீர்த்தம் சேயாற்று உற்று நீரைத்தாங்கி உள்ளது. வடக்கே நூற்றுக்கால் மண்டபம் அமைக்கப்பட்டு அதில் இறைவனின் திருவிளையாடல்களை உணர்த்தும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும், நடு மண்டபத்தில் நேர்முகமாக 7 கரங்களையுடைய கூத்தாடும் விநாயகர், ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஆறுமுகம், வடக்கு முகமாக ஸ்ரீபாலகுஜாம்பிகை அம்மாள், நவக்கிரகங்கள்,தலவிருட்சமான ஆண்பனை குலையீன செய்த அற்புத பனை மரம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.
திருஞான சம்பந்தர் கி.பி. 7-ம் நூற்றாண்டில் இத்திருத்தலம் வந்த வணங்கி வழிபட்டபோது சிவனடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சமணர்களை தமது பக்தியின் திறத்தால் வாதத்தில் வென்று சைவ மதத்திற்கு மாற்றிய இறைவனின் அருளால் ஆண் பனையை பெண் பனையாக காய்க்குமாறு பதிகம் பாடினார். ஆண் பனைகள் அத்தனையும் குரும்பை இன்று பெண் மரங்களாக மாறி காய்கள் விழந்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருஞானசம்பந்தரின் 11 பதிகம் பாடிய பின்புதான் பணம் பழம் விழுகிறது. இப்பழத்தினை சாப்பிட்டால் குழந்தை பாக்கியமும், தீராத நோய்களும் தீர்க்கும் அற்புத பிரசாதமாக திகழ்கிறது. கருவறையில் ஓத்தூருடையான் (ஸ்ரீவேபுரீஸ்வரர்) அழகிய சதுர ஆவுடையார் மீது பெருலிங்கமாக அமர்ந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார். உள்ளே வலம் வந்தால் 108 சிவலிங்கங்களை தரிசிக்க முடிகிறது. தென் சுவற்றில் மாணிக்கவாசகருடன் 63 நாயன்மார்களும், 7 கன்னியர்களும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். மேற்கு சுவற்றில் வலம்புரி விநாயகர் என்கிற கற்பக விநாயகர், திருமால்,மயில்கொண்ட ஆறுமுகன் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

துர்க்கைக்கு எதிரே ஆதிகேசவ பெருமாள் வேதத்தை காக்கும் பொருட்டு பிரயோக சக்கரம் ஏந்தி காவல் கொண்டு இருக்கிறார். சண்டிக்கு நேரே அமைந்த வழியாக மூலவரை அடைந்து இறைவனை வழிபட்டு அதே வழியாக வெளியே வந்து பைரவர் சன்னதி கடந்து பாலகுஜாம்பிகை அம்மன் சன்னதி அடையலாம். கலை நுணுக்கத்துடன் எழில்மிகுவாக நான்கு திருங்கரங்களுடன் நின்ற கோலத்தில் வழிபடுவதோடு, சிலை வடிவில் உள்ள ஆர்த்தநாரீஸ்வரர், பனையை வணங்கி நம் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

அமைவிடம்:-
இறைவனின் சக்தியை ஊணர்த்துகின்ற சிறப்பு வாய்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலையில் 30 கி.மீ தொலைவிலும், திண்டிவனம் 55 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

About the author

Svttv

Leave a Comment

Powered by themekiller.com anime4online.com animextoon.com