ஆயுர்வேதம்

பல அறிய மருத்துவ குணங்களைக் கொண்டது கொல்லிமலை இஞ்சி

இஞ்சி
Written by Svttv

காரமும், மணமும் நிறைந்த கொல்லிமலை இஞ்சி!

இஞ்சி மஞ்சள் இனம். இஞ்சி காய்ந்தால் சுக்கு என்பர். கொல்லிமலை இஞ்சி காரமும், மணமும் நிறைந்தது.
கொல்லிமலையில் மண்ணின் வளத்துக்கு ஏற்ப அதிகமாக விளைகிறது. மலையில் இயற்கையாக விளைந்தாலும் பணப் பயிராகவே பார்க்கப் படுகிறது.
இஞ்சியின் குணங்கள்: இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சி, பசியைத் தூண்டிவிடும். உணவை செரிக்க வைக்கும் சுரப்பிகளை சுரக்க வைக்கும், மூட்டுக்களுக்கு வலு சேர்க்கும் தலை சுற்று மயக்கம் போக்கும், உடல்வலி, சளி இருமலைப் போக்கும்.
திரிகடுக சூரணத்தில் இஞ்சி சேர்க்கப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா செரியாமை சுவையின்மை ஆகியவற்றை குணமாக்கும் உணவு செரிக்கும் இரைப்பை, சிறு குடல், பெருகுடல் ஆகியவற்றை செயல் பட வைக்கும்.

சாப்பிடும் முறை: தோல் எடுத்த இஞ்சியைப் பொடிபொடியாக நறுக்கி தேனில் ஊறவைக்கவும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். பசி எடுக்கும் உணவு செரிக்கும். தலை சுற்றல், மயக்கம் தீரும் நாம் வழக்கமாக சாப்பிடும் பழச்சாறுகளில் இஞ்சியை நசுக்கிப் போட்டு வடிகட்டி பருகினால் நல்ல மனமும், சுவையும் கிடைக்கும். மோரில் இஞ்சி தட்டிப்போட்டு உப்புப் போட்டு பருகினால் மேலும் பல உடல் நலன்கள் ஏற்படும். இப்படி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதால் மேற் சொன்ன பல வியாதிகள் தீரும்.

இப்படி சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், நாம் அன்றாடம் செய்யும் தேங்காய் சட்னி தக்காளிக் குருமா கொத்து மல்லிப் புதினாத் துவையல் இவைகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டு சாப்பிடலாம். மஞ்சள் போலவே இருக்கும் மா இஞ்சி மாங்காய் வாசனையோடும் ருசியோடும் இருக்கும். இதையும் சமையலுக்கு பயன்படுத்தலாம், இதிலும் மருத்துவ குணங்கள் உண்டு.

About the author

Svttv

Leave a Comment

Powered by themekiller.com anime4online.com animextoon.com