பரிகாரம்

கர்மவினைகள் தீர்க்கும் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி

அஷ்டலக்ஷ்மி
Written by Svttv

ஆந்திர மாநிலம், நகரி அடுத்துள்ள வேப்பங்குட்டா ஐஸ்வர்யபுரியில் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்ரீ நாராயணன் என்ற திருநாமம் கொண்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கர்ம வினைகள் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. இவரை காண திருப்பதி செல்லும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி தரிசித்து புத்துணர்ச்சியுடன் செல்கின்றனர்.

தலவரலாறு :-

பக்தி யோகம், கர்மயோகம்,ஹதயோகம், ஞான யோகம் இவை நான்கும் நல்கும் இந்த ஆலயம். சமாதி பாதம் – சாதன பாதம் விபூதி பாதம் கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களையும் விளங்கிகொண்டு வால்மீகி வழங்கிய ராம காவியத்தில் கேட்ட வரத்தால் வந்த வரபிரசாதம் தான் இந்த தெய்வீக சக்தி வாய்ந்த ஆலயம்.

பிச்சைக்காரனாக வேடம் புகுந்த இராவணன் தேடி வந்து சீதாவை பூமியோடு வானவீதியில் கடத்தி செல்வதைக் கண்ட ஜடாயு இராவணின் ஆடாத செயலை இறக்கையில் இடைமறிக்க இறகு ஓடிந்து கீழே விழுந்தது. உடனே தன் மருமகன் அக்னியை  அழைத்து சாட்சாத் மஹாலக்ஷ்மி சீதாதேவியை ஏதாவது மாயம் செய்து காப்பாற்று இராவணன் பலசாலி எனக்கூறி மாண்டது.

ஓரு காலத்தில் இதே ராவணின் காம இச்சைகளிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அக்னி தேவனை தன் தவ வலிமையால் வரச் செய்து அதனுள் தஞ்சம் புகுந்தவள் வேதவதி.

அக்னி சீதாதேவி காணுற்றதும் வேதவதியை போலவே இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு வேதவதியை இவ்விடத்தில் விடுத்து தன் வசம் சீதாதேவியை இட்டு சென்றான். இராமன் வந்தார், இராவணனை வென்றார்.

சீதை உருவில் உள்ளது வேதவதி என உணர்ந்தான். இராமன் அக்னி பிரவேசம் யாருக்கு? சீதைக்கா விபூஷணா, இலக்ஷமணா, அக்னி குண்டம் தயார் செய்யுங்கள் அக்னி பிரவேசம் செய்து சீதை அதிலிருந்து வெளிவரட்டும் பின்னர் ஏற்றுக்கொள்வோம் என்று ராமரின் திருவாய் செப்பியது.

அக்னி குண்டத்தில் இறங்கினாள் வேதவதி, வெளியே வந்தார்கள் வேதவதியுடன் சீதா தேவியும், பிரபு, என் நிமித்தம் தங்கள் திருநாமத்தை அன்று முதல் இன்று வரை ஜெபித்து இன்னல்கள் பல அசோகவனத்தில் பட்டவள் இந்த வேதவதிதான் அவளை மணம்புரிந்து என் மனம் நிறையுறச் செய்ய வரம் தாருங்கள் என  சீதாதேவி ராமனிடம் வேண்டினாள். இல்லை இல்லை சீதாதேவி, இந்த அவதாரத்தில் நான் ஐகபத்தினி விரதன். கலியுகத்தில் சீனிவாசனாக அவதரிப்பேன். அப்பொழுது வேதவதி பத்மாவதியாக ஆகாச இராஜனின் வளர்ப்பு மகளாக வளருவாள், நானே சென்று மணக்கிறேன் என்று இந்த வரம் அங்கு நிறைவேறும் என்றான் இராமன். அவ்வாறே நாராயணபுரத்தில் பத்மாவதி நாராயணன் திருமணம் பிரம்மா சிவன் முன்னிலையில் விமர்சியாக நடந்தேறியது. அகஸ்தியரும் திருமணத்திற்கு  வந்தவர். திருமலைகுப்பம் (என்று இன்று வழங்கும்) குன்றின்மீது அகஸ்தியர் ஆசிரமத்தில் புதுமண தம்பதிகள் வசிக்கலாயினர். பிருகு முனிவர் திருமாலை நெஞ்சில் எட்டி உதைத்தவர் கண்டு வெகுண்டு வெளியேறி கோப்பூரில் தவம் இருந்தாள். இத்திருமணம் நடந்தேறிய செய்தி கேட்டு லஷ்மி மனம் பதபதைத்து, உடல் வெடவெடத்தது. உடனே ஆசிரமத்திற்கு எதிரே நின்று நாராயணனை அழைத்தார். ஆனந்தசயனனும் லஷ்மி குரல் கேட்டு ஆனந்தமாக ஒடி வந்தவரை எதிர் கொண்டது. சுவாமி, தாங்கள் கடவுளா என் கணவரா? நான் இருக்கும்போது தாங்கள் திருமணம் நியாயமா?  என கேள்வி கேட்டாள். என் கணவரை யார் என் கணவர் என வினவுவது? பின் தொடர்ந்து வந்த பத்மாவதி லஷ்மியை பார்த்து கேட்டார், என் கணவர் உன் கணவரா? லஷ்மி கடுங்கோபமாக வாதிட எத்தனித்தார், காணுற்ற நாராயணன் பொறுங்கள், சற்று அக்னி பிரவேச காட்சிகளின் சாட்சியை காணுங்கள் என தன் அணுகிரகத்தால் காணச் செய்தார். கண்டதும், களிப்புற்றனர் கலியுக பெண் தெய்வங்கள். மனம் களித்த இவ்விடத்தில் ஆலயம் எழுப்பி உலகம் மக்கள் சுபிஷம் பெற செய்வோம் என நாராயணனிடம்  வேண்டினார்கள்.

லஷ்மிதேவி, நான் திருமண செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கியுள்ளேன், அதற்கு வட்டி கட்ட வேண்டும். லக்ஷ்மிதேவி உன்னை நோக்கி தாமரை மலர்கொண்டு அர்ச்சித்து தவம் இருக்க போகிறேன், நீ அணுசரித்து என்னை வணங்க வரும் பக்தர்களுக்கு நிறைவான செல்வமும், ஆரோக்கியமும் நிரந்தரமாக அளிப்பாய், பத்மாவதி திருச்சானூரில் அலமேலு மங்கம்மாவாக அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவாள். லக்ஷ்மிதேவியின் அருளால் உலக செல்வமூர்த்தியாக நாம் விளங்கிய பின்னரே இங்கு நம் விருப்பம்படி லக்ஷ்மிக்கு முக்கியத்துவம் அளித்து உலக மக்களுக்கு எட்டு அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும். கேட்டவர்க்கு எல்லா ஐஸ்வர்யம் தரும் ஐஸ்வர்யபுரியாக விளங்கும். இதை ஜமுனா தேவி (யமுனா) என்ற பெண்மணி நம் ஆலயத்தை நிர்மாணிப்பாள்.

கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனுக்கு வழிவிட்டு காப்பாற்றிய ஜமுனா நதி என்ற பெயர்கொண்ட பெண் ஓருவர் (ஜமுனாதேவி) நமக்கு ஆலயம் கட்டுவாள்.

தூய பெருநீர், யமுனைத் துறைவனை என்று பாடிய ஆண்டாள், கண்ணனுடைய அவதார காலத்தில் உபகாரம் பண்ணின யமுனை நதிக்கு நற்சான்றிதழ் தந்தார். வாசுதேவன் கண்ணனைத்தூக்கி கொண்டு வந்த கோகுலத்திற்கு போகையில் அவர் கேட்காமலேயே இடுப்பளவுக்கு வடிந்து வழி விட்டதோடல்லாமல் ஓரு கட்டத்தில் நீர் மட்டத்தை உயர்த்தி உயரே ஓரு எம்பி எம்பி கண்ணனின் பாத கமலங்களைத் தொட்டு வணங்கிய பேரும் பெற்ற யமுனா நதி. புண்ணியத்தையும் தூய்மையையும் தேடிக்கொண்டது.

தலம் உருவான வரலாறு :

மனிதனாக பிறந்தவன் ஓவ்வொருவரும் நம்மை படைத்த பகவானுக்கு படைக்க வேண்டியது, அவனால் இயன்ற ஆலயம் அமைப்பது அல்லது ஆன்மீகத்தை அனைவருக்கும் எடுத்து உரைப்பது அல்லது கடைபிடிப்பது அல்லது பூஜை புனஸ்காரங்கள் செய்வது அல்லது மந்திரங்கள் ஜெபிப்பது அல்லது தியானம் செய்வது அல்லது பக்தி செலுத்துவது அல்லது பக்தர்களுக்கு சேவை செய்வது அல்லது ஆண்டவனுக்கு சேவை செய்வது இதில் எது ஓன்று ஆயினும் அது ஆண்டவனை அடையும் அற்புதப் பாதையாகும் என ஆன்றோர்கள், மதவாதிகள், ஞானம் பெற்றவர்கள், ஆன்மீகவாதிகள் ஆணித்தரமாக உலகு முழுவதும் மக்களுக்கு ஆன்மீக உரையாற்றி வருவது நாம் படித்திருக்கின்றோம், கேட்டு இருக்கின்றோம். இது நடைமுறையான விஷயம் தான்.  ஆனால் கடவுள் மீது பக்தி பரவசத்தை தூண்டும் வகையில் தனி ஓரு பெண் தன் சொத்துக்களை விற்று, 3 கோடி ரூபாயில் கோயில் கட்டியிருப்பது வியக்கத்தக்கது. இக்கோயிலுக்கு முன்பு 10 இலட்ச ரூபாய் செலவில் ஸ்ரீ இதிலக்ஷ்மி கோயிலை கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுன தியானத்தில் மஞ்சள் நிற ஓளி:-

திருத்தனியில் கோபால் தனபாக்கியம் தம்பதிகளுக்கு பிறந்தவர் ஜமுனாதேவி கணவர் இராஜேந்திரலு உடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். மகள்கள், சீதா, ரேவதி மகன் ஷ்யாம் சுந்தரரும் என்பவர்களும் உண்டு. ஜமுனா தேவி 4 நாட்கள் தியானத்தில் இருந்தபோது மஞ்சள் ஓளி பட்டு அசரீரியாக ஓரு குரல் கேட்டது. அப்போது அவர், நான்தான் அஷ்டலக்ஷ்மி நாராயணா, வந்துள்ளேன், எனக்கு ஐஸ்வார்ய புரியில் ஆலயம் அமைத்து தரவேண்டும் என்று கூறினார். பின்னர் ஜமுனாதேவி  திருத்தனியில் நான்கு வீடுகளை விற்று, பத்தாண்டுகளாக ஐஸ்வர்ய புரி, வேப்பங்குட்டாவில்,  சுமார் 3 ஐக்கர் பரப்பில் 73 அடி உயரத்தில் சங்கு போன்ற கூம்பு அமைப்பில்  108 அடி வேதம், நான்கு புறமும், சக்கரம் போன்ற அமைப்பில் உள்ள ஐம்பூதம் குறிக்கும் ஐந்து அடுக்கு கொண்ட அஷடத்திற்கும், மக்களும் ஐஸ்வர்யம் பெறும் வகையில்  அஷ்ட லக்ஷ்மிகளும் இங்கு வா என்று அழைப்பது போன்று சிரித்த முகத்தோடு காட்சி தருகிறார் கலியுக பெருமாள், ஸ்ரீ நாராயணனின் மடியில் மஹாலக்ஷ்மியும், பத்மாவதி தாயாரும் அமர்ந்திருப்பது கண்கொள்ளக் காட்சியாக உள்ளது.

19 நாடுகளின் அஷ்டலக்ஷ்மி ஆதர்ஷனா தியான பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இப்பயிற்சியில் மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றத்திறனாளிகள், கணவன் மனைவி பிரிந்தவர்கள் சேர, மனநிலை திடம் பெற தியானப் பயிற்சி அளிக்கிறார்கள்.

இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், துணிமணிகள் வழங்கப்படுகிறது. மேலும் இலவச மருத்துவ முகாம் மாதம் தோறும் நடத்தப்படுகிறது.

பௌர்ணமி :

பௌர்ணமி நாட்களில் பூஜைகள், தியானம், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் அன்னதானம் போன்றவைகள் இக்கோயிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் 90 சதவீதம் முடிவுற்றுள்ளது. மேலும் திருப்பணி தொடர பொருளுதவியோ அல்லது பணஉதவியோ தந்து அஷ்லக்ஷ்மி நாராயணனின் அருளாசி பெற வேண்டுகிறோம்.

அமைவிடம் :

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி டூ புத்தூர் இடையில் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பங்குட்டா கிராஸ் ரோடு என்ற இடத்தில் உள்ளது.

தொடர்புக்கு :

ஆதிலக்ஷ்மி அம்மா அவர்கள், ஆதிலக்ஷ்மி ஆலயம், வேப்பங்குட்டா, கிராஸ் ரோடு, ஐஸ்வர்யபுரி, புத்தூர் மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்.

About the author

Svttv

Leave a Comment

Powered by themekiller.com anime4online.com animextoon.com